காஞ்சி |
காஞ்சி மரம்
காஞ்சி (Trewia nudiflora) என்பது ஒரு மரம்
காஞ்சி | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||||||
|
- காஞ்சிபுரம்
- காஞ்சி-மரம் மிகுதியாக இருந்த ஊர் காஞ்சி. இதனைக் காஞ்சிபுரம், கச்சி என்றெல்லாம் வழங்குகின்றனர். சங்ககால மன்னன் தொண்டைமான் இளந்திரையன் கச்சியோன் எனப் பாராட்டப்பட்டுள்ளான்.
- காஞ்சி ஆறு
- காஞ்சி என்பது சேரநாட்டில் ஓர் ஆறு [1]
- காஞ்சித்திணை
- காஞ்சிப் பூவைச் சூடிக்கொண்டு போரிடுவது காஞ்சித்திணை.
- தொல்காப்பியம் கூறும் புறத்திணை ஏழில் காஞ்சித்திணை ஒன்று. இறந்தவர்களுக்காக இரங்கல், இறந்தவருடன் தானும் முடிதல் முதலான செய்திகளைக் கூறுவது தொல்காப்பியர் காட்டும் காஞ்சித்திணை.
- ஐயனாரிதனார் என்னும் ஒன்பதாம் நூற்றாண்டுப் புலவர் தாம் எழுதிய புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலில் புறப்பொருளைப் பன்னிரண்டு திணைகளாக வகுத்துள்ளார். அவற்றில் பகைவனை வெல்லக் கருதியவன் வஞ்சிப்பூ சூடிப் போருக்குக் செல்வான் என்றும், அவனது போரை எதிர்கொண்டு தாக்குபவன் காஞ்சிமலர் சூடிப் போரிடுவான் என்றும் இவர் குறிப்பிடுகிறார்.
- காஞ்சிப்பாடல்
- காஞ்சி என்னும் சொல் இறந்தவரைக் குறிக்கும்.[2]
- பிணம் கிடக்கும்போது வெளியில் இசை முழக்கத்துடன் பாடப்படும் பாடல் காஞ்சிப் பாடல்.[3]
- காஞ்சி அணி
- மேகலை, காஞ்சி, வாகுவளையம் – ஆகியவை மகளிர் இடையில் அணியும் அணிகலன்கள்.[4]
சங்கப்பாடல்களில் காஞ்சிமலர்
- காஞ்சி மரத்துக்குச் செம்மருது என்னும் பெயரும் உண்டு.[5]
மரம்
- குறைந்த உயரத்திலேயே கிளைகள் விடும்.[6]
- பசுமையான இலைகளை உடைய குருகு என்னும் கொடி குறுங்கால் காஞ்சி மரத்தில் ஏறிப் படர்ந்து பூத்துக் கிடக்கும்[7]
- ஆற்றோர ஊர்கள் வெள்ளத்தால் தாக்கப்படுவதிலிருந்து காப்பாற்றும் மரங்களாகய்க் காஞ்சி மரங்கள் இருந்தன.[8]
- காஞ்சிப் பூக்கள் அதன் நனை பருவத்தில் மீன் போலத் தோற்றமளிக்கும் [9]
- பூக்கள் மரத்தில் இருக்கும்போதே அதன் தாதுகள் கொட்டும் [10]
- காஞ்சிப்பூவின் மணத்தை வதுவை நாற்றம் என்றனர் [11]
- மணல் மலிந்த ற்றுத் துறைகளில் மருதும் காஞ்சியும் நெருங்கி வளரும் [12]
- காஞ்சிமரம் காமன் போல் அழகு மிக்கது.[13]
- மயில்[14] மணிச்சிரல் என்னும் மீன்கொத்தி [15] குயில் [16] முதலான பறவைகள் காஞ்சி காஞ்சி மரத்தில் இருப்பிடம் கொள்வதை விரும்பும்.
பயன்பாடு
- காஞ்சி இலைகளை ஆயர் தம் ஆடுமாடுகளுக்குத் தீனியாக அறுத்துப் போடுவர் [17]
- காஞ்சி தழைக்காக வெட்டப்படும் [18]
- மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் காஞ்சியும் ஒன்று.[19]
- அமரும் இருக்கைகள் காஞ்சித் தழையில் செய்யப்படுவது உண்டு. [20]
- காஞ்சித் தளிர்களை ஆரமாகக் கட்டி அணிந்துகொள்வர் [21]
மகிழ்வு
- காஞ்சி மரத்தடியில் அதன் உதிர்-பூ எருவின் மேல் மகளிர் குரவை ஆடுவர்.[22] [23]
- மகளிர் வள்ளைப் பாட்டில் ஊர்வளம் பாடி காஞ்சி நிழலில் நெல் குற்றுவர்.[24]
- மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் காஞ்சியும் ஒன்று.[25]
மேற்கோள் குறிப்பு
- ↑ பதிற்றுப்பத்து 48
- ↑ காஞ்சி சான்ற வயவர் பதிற்றுப்பத்து 65
- ↑ புறம் 281, 296,
- ↑ பரிபாடல் 7-47
- ↑ முடக்காஞ்சிச் செம்மருதின் மடக்கண்ண மயில் ஆல - பொருநராற்றுப்படை 189
- ↑ நறும்பூங் கோதை தொடுத்த நாள்சினைக் குறுங்கால் காஞ்சி - சிறுபாணாற்றுப்படை 179
- ↑ பெரும்பாணாற்றுப்படை 375
- ↑ மலைபடுகடாம் 449
- ↑ ஐங்குறுநூறு 1
- ↑ அகம் 56
- ↑ அகம் 25
- ↑ பதிற்றுப்பத்து 23
- ↑ மீனேற்றுக் கொடியோன் போல் மிஞிறு ஆர்க்கும் காஞ்சி - கலித்தொகை 26-3
- ↑ பொருநராற்றுப்படை 189
- ↑ சிறுபாணாற்றுப்படை 179
- ↑ கலித்தொகை 34-8
- ↑ பதிற்றுப்பத்து 62
- ↑ கொய்குழை அகை காஞ்சி - கலித்தொகை 74-5
- ↑ குறிஞ்சிப்பாட்டு 84
- ↑ அமரும் உழவர் காஞ்சியம் குறுந்தறி குத்தி – அகம் 346
- ↑ புறம் 344
- ↑ கலித்தொகை 108-60
- ↑ அகம் 336
- ↑ அகம் 286
- ↑ குறிஞ்சிப்பாட்டு 84
நன்றி விக்கிபீடியா...