Total Pageviews

Tuesday, August 4, 2015

iingai

ஈங்கை

ஈங்கை

ஈங்கை என்னும் புதர்முட்செடியை இக்காலத்தில் “இண்டு” என்பர். இது பற்றி சங்க இலக்கியத்தில்தரப்பட்டுள்ள செய்திகள் பின்வருமாறு:
மகளிர் மணல் மேல் அமர்ந்து ஆடும் கழங்கு விளையாட்டுக் காய்கள் போலப் பாறைகளின் மீது ஈங்கைப் பூக்கள் கொட்டுமாம்
இளவேனில் காலத்தில் கோங்கம் பூக்கத் தொடங்கும்போது, ஈங்கை தளிர் விடுமாம்
நௌவி-மான் குளம்பு அடி மண்ணில் பதிந்தது போல ஈங்கைப்பூ வெண்ணிறம் கொண்டதாம்
சங்க காலச் சிறுவர் விளையாடிய வட்டு நெல்லிக்காய் அளவு இருந்த்து. பிசிர் மயிர்களைக் கொண்ட ஈங்கைப் பூவும் வட்டு அளவு இருக்கும்
ஈங்கை வயல் வேலியில் பூக்கும். ஈங்கைக்கு முள் உண்டு. இதனை மாமரத்துக்கு வேலியாகப் பயன்படுத்துவர்
புதராக இருக்கும் ஈங்கைப் பூங்குழை தன்னை வருடிக்கொடுக்கும் இன்பத்தில் குருகு என்னும் பறவைபதுங்கியிருக்கும்
ஈங்கை ஒரு வெண்மையான கொடி. பனி அரும்பும் கூதிர் காலத்தில் (கார்த்திகை மார்கழி மாதங்களில்) பகன்றையும், ஈங்கையும் பூக்கும்
ஈங்கை வெண்ணிறத்தில் பூக்கும்
வெள்ளம் வடிந்த ஆற்றுமணலில் ஈங்கையின் வாடிய பூக்கள் வரிவரியாகப் பரவிக் கிடந்தன
ஈங்கைத் தளிர் மாரிக் காலத்தில் மாந்தளிர் போல் இருக்கும்
ஈங்கை முள் வளைவாக இருக்கும்.
ஈங்கைப் பூ மழை பொழியும்போது விழும் பனிக்கட்டி போல் இருக்கும்
அவள் மேனி மாந்தளிர் போலவும், மாரி காலத்து ஈங்கை போலவும் மாமைநிறம் கொண்டிருந்தது

அடிக்குறிப்பு

  1.  சிறைநாள் ஈங்கை உறைநனி திரள்வீ, கூரை நன்மனைக் குறுந்தொடி மகளிர், மணலாடு கழங்கின் அறைமிசைத் தாஅம் - நற்றிணை 79
  2. Jump up கோங்கம் குவிமுகை அவிழ, ஈங்கை நல்-தளிர் நயவர நுடங்கும், முற்றா வேனில் - நற்றிணை 86
  3. Jump up ஈங்கை முகை வீ அதிரல், மோட்டுமணல் எக்கர், நௌவி நோன்குளம்பு அழுந்து என வெள்ளி உருக்குறு கொள்கலம் கடுப்ப - நற்றிணை 124
  4. Jump up அட்டரங்கு உருவின் வட்டுமுகை ஈங்கைத் துய்த்தலைப் புதுமலர், - நற்றிணை 193
  5. Jump up படப்பைக் கொடுமுள் ஈங்கை நெடுமா அந்தளிர் நீர்மலி கதழ்பெயல் தலைஇய ஆய்நிறம் புரையும் இவள் மாமைக் கவினே - குறுந்தொகை 205
  6. Jump up பனிப்புதல் ஈங்கை அங்குழை வருட, சிறை குவிந்து இருந்த பைதல் வெண்குருகு, - குறுந்தொகை 312
  7. Jump up பகல்மதி உருவின் பகன்றை மாமலர், வெண்கொடி ஈங்கை பைம்புதல் அணியும், அரும்பனி அளைஇய கூதிர் - ஐங்குறுநூறு 456
  8. Jump up ஈங்கைத் தூ அவிழ் பனிமலர் உதிர - அகம் 252,
  9. Jump up துய்தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை – அகம் 294
  10. Jump up கலித்தொகை 31
  11. Jump up மாரி ஈங்கை மாத்தளிர் - அகம் 75
  12. Jump up முட்கொம்பு ஈங்கைத் துய்த்தலைப் புது வீ - அகம் 306, கொடுமுள் ஈங்கை சூரலொடு மிடைந்த வான்முகை - அகம் 357
  13. Jump up இரங்காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை ஆலி அன்ன வால் வீ தாஅய் - அகம் 125
  14. Jump up மாரி ஈங்கை மாந்தளிர் அன்ன அம் மா மேனி - அகம் 206

No comments:

Post a Comment