Total Pageviews

Tuesday, July 28, 2015

Adumbu

அடும்பு

அடும்பு

அடும்பு அல்லது அடம்பு (Beach Morning Glory / Goat's FootIpomoea pes-caprae) என்பது ஒருவகையான படரும் கொடி ஆகும். இது கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும். சங்க இலக்கியங்களின் பல பாடல்களில்நெய்தல் நிலத்திலே விளைவதை குறித்துள்ளனர். நற்றிணை என்னும் நூலில் (பாடல் 254ல்) 'குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்' என்று குறிப்பிடப்படுகின்றது. இதன் இலை ஆட்டுக்காலின் குளம்படி போலும் கவைத்து (இரு கிளையாக) உள்ளதைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறுவதைப்போலவே அறிவியலிலும் Biloba குறிக்கப்பட்டுள்ளது. இக்கொடியின் மலர் செந்நீல நிறத்தில் பெரியதாக இருக்கும். இச்செடிஇருவிதை நிலைத்திணை வகையைச் சேர்ந்தது (Dicotyledons). [மலையாளப் பெயர்: அடும்பு வள்ளி, இந்திப்பெயர்: டோப்படிலேடா]


***~>நன்றிகள் *** விக்கிபீடியா<~***

No comments:

Post a Comment