Total Pageviews

Tuesday, July 28, 2015

Adhiral

அதிரல்

அதிரல்

அதிரல் (Derris scandens) கொடி மரத்தில் படரும். அதன் பூக்கள் பூனைப் பற்கள் அளவில் இருக்கும். ஆற்றுமணலில் கொட்டிக் கிடக்கும். மகளிரும் ஆடவரும் இதனைத் தனியாகக் கட்டியும் பிற பூக்களோடு சேர்த்துக் கட்டியும் அணிந்துகொள்வர். சங்கப் பாடல்கள் தரும் செய்திகள் இவற்றைப் புலப்படுத்துகின்றன.
அதிரல் வேனில் காலத்தில் பூக்கும். இம்மலர் இரவில் அல்லது வைகறைப் பொழுதில் மலரும். இதனைப் `புனலிக்கொடி' என்று நச்சினாரிக்கினியரும், காட்டுமல்லிகை என்று அரும்பதவுரையாசிரியரும், மோசிமல்லிகை, என்று அடியார்க்கு நல்லாரும் குறிக்கின்றனர். இது இளவேளிற்காலத்தில் மிகுதியாக மலரும். அதிரல் மொட்டின் வடிவம் கூர்மையாகவும் நீட்சியுடையதாகவும் இருக்கும். வெண்மை நிறமாக விளங்கும் அதிரல் மொட்டுக்களின் மீது மெல்லிய வரிகள் காணப்படும். அவை வெருகின் கூரிய எயிறுகளைப் போன்றிருக்கும் என்று அடிகள் உணர்த்துகின்றன.
காட்டுமல்லிகை எனப் பேச்சு வழக்கில் சொல்லப்படும் மல்லிகையின் மணமில்லா மல்லிகை இது. அழகிய வெள்ளை நிறத்தில் ஆறேழு இதழ்களும், தளிர் பச்சையில் சிறு காம்பும், அடர் பச்சையில் நீள் வட்ட இலைகளும், மலருமாக அழகாக இருக்கும். வசமில்லா மலராக இருந்தாலும், மலரின் வெண்மன்நிறமும், அதன் நீண்ட இதழ்களுமாய்,பார்க்கவே அழகாக இருக்கும்.
பூஜைக்கு உகந்த மலராகவும், திருமண சடங்கிலும் மிக முக்கிய பங்கு வகிக்கும் மலராகவும் உள்ளது மணிப்பூரில் ஒரு பிரச்சித்தி பெற்ற மலரிது.

சங்கப்பாடல்களில் அதிரல்

  • குறிஞ்சிப்பாட்டு தொகுத்துக் கூறும் 99 மலர்களில் அதிரல் என்பதும் ஒன்று
  • அதிரல் என்பது ஒருவகைக் கொடி. அது சிதரல் விழும் ஊதல்காற்றில் அசைவது போலப் பாசறையில் நள்ளிரவில் பாண்டியனின் மெய்க்காளர் அங்குமிங்கும் சென்றுவந்தார்களாம்
  • அதிரல் பாதிரி மரத்தில் படரும்
  • கோங்க மரத்தில் படரும்
  • நடுகல் பதுக்கையை அதிரல் கொடி மூடிக் கிடந்தது
  • அதிரல் மிக நீண்ட கொடி
  • தலைவன் தலைவியை அதிரல் அங்கண்ணி! என விளிக்கிறான்
  • அதிரல் வேனில் காலத்தில் பூக்கும். 
  • நள்ளிரவில் மலரும்
  • அதிரலும் பாதிரியும் மணலில் கொட்டிக்கிடக்கும்
  • வைகை ஆற்று மணலில் அதிரல் மலர் கொட்டிக் கிடக்கும்
  • அதிரல் வழங்கிய கொடை போலக் கொட்டிக் கிடக்கும் 
  • அதிரல் பூவானது காட்டுப் பூனையின் பல்வரிசை போல முகை விடும்.
  • அதிரல் பாதிரி மாரோடம் ஆகிய மலர்களைச் சேர்த்துக் கட்டி மகளிர் கூந்தலில் அணிந்துகொள்வர்
  • தகரம் என்னும் மண எண்ணெய் பூசிய முச்சியில் குவளையொடு சேர்த்துக் கட்டியும் அதிரல் பூ அணியப்படும்
  • ஆடவர்களும் தம் பித்தையில் சூடிக்கொள்வர்
  • அதிரல் போதினைக் குவளைப் பூவோடு சேர்த்துக் கட்டியும் அணிந்துகொள்வர்
  • நள்ளிரவில் அணிந்துகொள்வர்.




***~>நன்றிகள் *** விக்கிபீடியா<~***

No comments:

Post a Comment