Total Pageviews

Monday, August 3, 2015

Irulnaari

இருள்நாறி

இருள்நாறி

இருள்நாறி (இருள்வாசி அல்லது இருவாச்சி) என வழங்கப்பட்ட பூவைக் குறிஞ்சிப்பாட்டு நள்ளிருள்நாறி என விளக்குகிறது.
மாலையில் மலரும் பூக்கள் இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும். அவற்றுள் பெரிதும் மணந்து நாறுவது மரமல்லிகை. இக்காலத்தில் மரமல்லிகை என வழங்கப்படும் பூவைச் சங்க கால மக்கள் “நள்ளிருள்-நாறி” எனக் கொள்வது பொருத்தமானது.
”பீநாறி” என்னும் பெயர் கொண்ட மரம் ஒன்று உள்ளது. இதற்கு மலர் இல்லை.
மல்லிகை
மரமல்லி
மரமல்லி
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
நிலைத்திணை
(தரப்படுத்தப்படாத):பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத)Eudicots
(தரப்படுத்தப்படாத)Asterids
வரிசை:Lamiales
குடும்பம்:Bignoniaceae
பேரினம்:Millingtonia
Carolus Linnaeus the Younger
இனம்:M. hortensis
இருசொற்பெயர்
Millingtonia hortensis
Carolus Linnaeus the Younger
வேறு பெயர்கள்
நன்றிகள்...விக்கிபீடியா

Aavaarai

ஆவாரை

ஆவாரை

ஆவாரை , ஆவிரை அல்லது மேகாரி (Cassia auriculata) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒருதாவரமாகும்.

தீரும் நோய்கள்

நீரிழிவு, மேக நோய்கள், நீர்கடுப்பு, உள்ளங்கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கான மருத்துவத்திற்கு பயன்படுகிறது. ஆவாரை இலையை பாசிப்பருப்பு, பூலாங்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து உடலிற் பூசிக் குளித்துவர உடல் அரிப்பு, உடல் வெப்பம் ஆகியவை குறையும். ”ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் காண்பதுண்டோ ?” என்பது சித்த மருத்துவப் பழமொழி.

தைப்பொங்கலில்


ஆவிரை என்பது இக்காலத்தில் ஆவாரம்பூ என வழங்கப்படுகிறது. தைப்பொங்கல் கொண்டாட்டத்தின்போது காப்புக் கட்டுவதற்கும், மாட்டுப்பொங்கலன்று மாடுகளுக்கு மாலை கட்டுவதற்கும், வீடுகளுக்குத் தோரணம் கட்டுவதற்கும் ஆவாரம்பூவை இக்காலத்திலும் பயன்படுத்துகின்றனர்.
சங்க காலத்தில் மடல்-மா ஏறி வருகையில் பயன்படுத்தப்பட்ட இந்தப் பூ தைப்பொங்கல் விழாவில் பயன்படுத்தப்படும் பூவாக மாறியுள்ளது.

சங்கநூல் குறிப்புகள்


தொல்காப்பியர் இந்த மரவினத்தைக் குறிப்பிடுகிறார். ஆவிரை என்னும் மரப்பெயர் அதன் பகுதிகளைக் குறிக்கும்போது ஆவிரங்கோடு, ஆவிரஞ்செதிள் (பட்டை), ஆவிரந்தோல், ஆவிரம்பூ – என வரும் என்கிறார் 
குறிஞ்சிப்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ள 99 வகையான மலர்களில் ஒன்றாக இது குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைவியை அவளது பெற்றோர் அவள் விரும்பும் தலைவனுக்குத் தர மறுத்தால் ஊரில் மடலூர்ந்து வந்து பெறப்போவதாக அந்தத் தலைவன் குறிப்பிடுகிறான். பனைமட்டைகளால் குதிரை செய்வானாம். அதற்கு ஆவிரம்பூ மாலை சூட்டுவானாம். இன்னாள் இவ்வாறு வரச்செய்தாள் என எழுதி அதன்மேல் வைத்திருப்பானாம். இதனைப் பார்க்கும் ஊரார் அந்தத் தலைவன்-தலைவியரைக் கூட்டுவிப்பார்களாம்.
மடல்மா மேல் வரும் ஒருவன் அக்குதிரைக்கு மயில்பீலி, பூளாப் பூ, ஆவிரை (ஆவாரம்பூ) ஆகியவற்றைச் சூட்டியிருந்தானாம்.
ஆவிரை மலரையும் எருக்க மலரையும் சேர்த்துக் கட்டிய மாலையை அவன் அணிந்திருந்தானாம்.
காதலர் இருவர் ஆவிரை மலர்மாலை அணிந்துகொண்டு பல ஊர் மன்றங்களில் இன்னிசை முழங்க ஆடினார்களாம்.

ஆவிரை மலர் காடு

அடிக்குறிப்பு

  1. Jump up தொல்காப்பியம் 1-284
  2. Jump up அடி 71
  3. Jump up குறுந்தொகை 173
  4. Jump up பொலமலர் ஆவிரை - கலித்தொகை 138
  5. Jump up கலித்தொகை 138
  6. Jump up அகநானூறு 301
நன்றிகள் விக்கிபீடியா

Aaram

சந்தனம் (Santalum album, Indian sandalwood) மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும் சந்தனக் கட்டையைச் சந்தனக் கல்லில்  தேய்த்து வரும் சாந்தை கோடை வெப்பத்தைத் தணிக்க மார்பில் பூசிக்கொள்வது இந்திய மக்களின் வழக்கம். இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். இதன் தாயகம் இந்தியா ,இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படும். சுமாரான உயரத்துடன் கூடிய மரம். வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது. மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவை. சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவை.

சந்தன மர அமைப்பு

சந்தன பூக்கள்
மரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதியும், வேர்களும் மிகுந்த மணம் கொண்டவையாகும். சந்தன மரம் 12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. சந்தனமரம் தனித்து வளராது. வேறு மரத்திற்கு அருகில்தான் வளரும். மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச் சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது. மரம் வளர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பழங்களை தருகிறது.

வளரும் இடம்

இதன் தாயகம் இந்தியா சந்தன மரம் உலக விளைச்சலில் 65 சதவீதம் இந்தியாவில், குறிப்பாக கர்நாடகாவில் விளைகிறது. கர்நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட சுற்றளவு கொண்ட சந்தன மரங்கள் அரசுக்கு சொந்தமானவை. மேலும் சந்தன மரத்தை வெட்டுவது வனத்துறையால் செய்யப்படுகிறது. இலங்கையிலும் பன்னெடுங் காலமாகவே சந்தன மரங்கள் காணப்படுகின்றன. இப்போதும் இலங்கையின் மேல், தென், மத்திய, சப்பிரகமுவா, ஊவா ஆகிய மாகாணங்களில் சில காட்டுப் பகுதிகளில் தானாக வளர்ந்த சந்தன மரங்களைக் காணலாம். தற்காலத்தில் சந்தன மரங்கள் வணிகப் பயிர்களாக வளர்க்கப்படும் திட்டங்கள் ஆங்காங்கே செயற்படுத்தப்படுகின்றன.

வெள்ளை சந்தனம்

வெள்ளை சந்தன மரம் மரபணு சோதனை மூலம் மட்டுமே கண்டுபிடிக்கப்படக் கூடிய சாதாரண சந்தன மரங்களுள் சிறப்பு வாய்ந்த ஒன்று. பல லட்சம் மரங்களுக்கிடையில் ஒன்று அல்லது இரண்டு மரங்கள் மட்டுமே வளரும். இம்மரத்தில் செய்யப்படக்கூடிய முருகன், சிவன், வேல் முதலான சிலைகள் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன. இம்மரத்திற்குப் பல மருத்துவ குணங்களும் உள்ளதை பண்டைய நூல்களில் சித்தர்கள் குறித்துள்ளனர். 
வெந்சந் தனமரத்தா னல்லறிவு மின்பமெழிற்
பொற் செந்திருவருளும் பூமிதத்துண் - மெச்சுஞ்
சரும வழகுந் தனிமோ கமுமாம்
மிருமுநோ யேகும் பறழ்ந்து
- பதார்த்த குணபாடம் - பாடல் (209)
காட்சியகம்