Total Pageviews

Wednesday, July 29, 2015

Alli

அல்லி 

அல்லி

அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடிகுளம்பொய்கைநீர்ச்சுனைகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரைகாலையில் மலர்ந்து இரவில் குவியும். எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.

சங்கப்பாடல்கள் தரும் செய்தி


அல்லி மலர்
அல்லி வையையில் மிதந்து வந்தது. பரிபாடல் 12-78
அல்லியின் நிறம் சிவப்பு
மெல்லியல் மகளிரின் காலடி தாமரை போல் மென்மையானதாம். கல்லில் நடந்தால் அது கறுத்துப் போகுமாம். அந்தக் கறுப்பு அரக்கில் தோய்த்து எடுத்த நிறத்தில் காணப்படும் அல்லி போன்றதாம்.
மகளிர் கை
மகளிர் உள்ளங்கை தாமரைத் தாது உதிர்ந்து மலர்ந்த அல்லி போன்றதாம்.
கைம்பெண் சோறு போட்டுத் தின்னும் இலை
ஆம்பல்-அல்லி என்பது வெள்ளாம்பல். சிறிய வெள்ளாம்பல் இதழையும், இலையையும் அல்லி என்பர். கணவனோடு வாழ்ந்தபோது ஆம்பல் அவன் தைத்துத் தந்த தழையாடைக்குப் பயன்பட்டது. அவன் மாய்ந்தபின் புல்லின்மேல் சோறுவைத்து உண்ணும் உண்கலமாக மாக ஆம்பல்-அல்லி மாறிவிட்டது.
அல்லி காட்சி
பகன்றை மேல் படர்ந்திருந்த பாகல், கூதளம் ஆகிய மலர்கள் அல்லியைத் தொட்டுக்கொண்டு தொங்கினவாம்.
ஒப்பனைப் பொருள்
நெற்றியில் திலகம், நெஞ்சில் அல்லிச்சாந்து, தோளில் தொய்யில், காலடியில் பஞ்சிக் குழம்பு, ஆகியவற்றைத் தலைவன் தலைவிக்கு இட்டு நலம் பாராட்டுவான். [7]
அல்லிய மாலை
அல்லிப்பூ மாலை தொடுக்க உதவும்.
  • மணிமேகலை ‘அல்லியங்கோதை’ என்று அன்மொழித் தொகையாகக் குறிப்பிடப்படுகிறாள்.
  • மணிமேகலை மேல் காதல் கொண்ட உதயகுமரன் ‘அல்லியந்தாரோன்’ எனக் குறிப்பிடப்படுகிறான். 
அல்லிக்கூத்து
அல்லிப்பாவை என்பது தோல்பொம்மை விளையாட்டு.
அல்லி, தாமரை, திருமகள்
திருமால் மார்பில் மறுவாக இருப்பது அல்லி (திரு, தாமரையாள்)
திருமால் ஆடல்
கண்ணபிரான் ஆடல்களில் ஒன்று அல்லியம்

திருவாசகத்தில் அல்லி

சிவபெருமான் பெருமைகளைப் பாடி, 'பூ அல்லி கொய்யாமோ' என்று மாணிக்கவாசகர் 20 பாடல்கள் பாடியுள்ளார்.

பேயாழ்வார் பிறப்பு[தொகு]

திருவல்லிக்கேணி (திரு அல்லிக் கேணி) என்னும் பெயர் கொண்ட ஊர் இன்று சென்னையில் உள்ளது. இங்கிருந்த கிணற்றில் மலர்ந்திருந்த அல்லி மலரில் முதலாழ்வார் மூவருள் ஒருவராகிய பேயாழ்வார் தோன்றினார் என்பர்.
இவர் தோன்றிய அல்லி மலரைச் செங்கழுநீர் என்றும், செவ்வல்லி என்றும் குறிப்பிடுகின்றனர்.
அல்லிப் பூவைக் குறிப்பிடும் இந்தப் பாடல் கழுநீர்ப் பூவை வேறு பூ எனக் காட்டுகிறது.




***~>நன்றிகள் *** விக்கிபீடியா<~***


Aatthi

ஆத்தி

ஆத்தி

ஆத்தி மரம் (Bauhinia racemosa), ஒரு சிறிய, அடர்த்தியான மரமாகும். சீசல்பீனியேசியே (Caesalpiniaceae)தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் கிளைகள் தொங்கும் அமைப்பில் இருக்கும். இது கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் வரை உயரமான இடங்களில் இந்தியா எங்கும் காணப்படுவதுடன், இலங்கைசீனா, திமோர் ஆகிய நாடுகளிலும் இது பரவலாக உள்ளது. இம் மரத்தின் பட்டை, தலைவலிகாய்ச்சல், தோல் வியாதிகள், கட்டி, இரத்த நோய்கள், வயிற்றுப்போக்கு போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உள்ளூர் மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. இது நுண்ணுயிரெதிர்ப்புப் பொருட்களுக்கான மூலமாகப் பயன்படக்கூடும் எனவும் ஆய்வுகள் காட்டுகின்றன. இந்தியாவின் சில பகுதிகளில் இதன் இலை பீடிசுற்றுவதற்குப் பயன்படுகிறது.

  • சிவபெருமான் என்னும் தெய்வம் ஆத்திசூடி எனப் போற்றப்படுகிறான். இது இங்குக் காட்டப்பட்டுள்ள பூ
  • சோழவேந்தரின் குடிப்பூ 'ஆர்'. இதனையும் ஆத்தி என்பர்.
  • இந்த ஆத்திமலர் படம்
ஆத்திமலர் 2
ஆத்திமலர் 3


***~>நன்றிகள் *** விக்கிபீடியா<~***




Anichai

அனிச்சை

அனிச்சை

அனிச்சை அல்லது அனிச்சம் (Anagallis arvensis, Scarlet pimpernel) மிகவும் மென்மையான இதழ்களினை உடைய ஒரு பூவைக் கொண்ட ஒரு தாவர இனம். முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடக்கூடிய இயல்புடையது இந்தப் பூ.இதன் இதழ்கள் மென் செம்மஞ்சள் நிறத்தில் ஐந்து இதழ்களாகக் காணப்படும்.[சான்றுதேவை] இது சூரியன் இருக்கும் திசையில் இலைகளைத் திருப்பும்.[சான்று தேவை]




***~>நன்றிகள் *** விக்கிபீடியா<~***


Avarai

அவரை

அவரை

அவரை என்பது இருபுற வெடிக்கனி அல்லது லெகூம், பெபேசி குடும்ப வகையைச்சார்ந்த பயன்மிக்க ஒரு கொடிவகை நிலத்திணை(தாவரம்). இது நீண்டு வளரும் சுற்றுக்கொடி. இதன் காயே அவரைக்காய். உண்ணச் சுவையானதும் மிகுந்த சத்துள்ளதும் ஆகும். இதில் புரதச் சத்து அதிகம் உள்ளது (காயின் எடையில் சுமார் 25% விழுக்காடு புரதச்சத்து). நார்ப்பொருளும் நிறைய உள்ள ஒரு காய். இக்கொடியில் வெளிர் நீல நிறம் அல்லது வெண்ணிற பூக்கள் மலரும். இதன் நிலைத்திணையியல் அறிவியல் பெயர் லாப்லாப் பர்பூயூரிசு (Lablab purpureus). இக்கொடி நிலைத்திணை இயலில் ஃவேபேசி (Fabaceae) என்னும் குடும்பத்தைச் சார்ந்தது. இந்த அவரையிலும் பல வகைகள் உண்டு. மொச்சை அவரை என்னும் வகையின் விதைகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்தேபிற நாடுகளுக்குப் பரவியதாக கருதப்படுகிறது (நூல் துணை).


***~>நன்றிகள் *** விக்கிபீடியா<~***